;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை (பெப்.26) 500 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளமை காரணமாக கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை எகிறி வருகிறது.

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் செய்யப்படும் முதலீடு குறைந்து, அது தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (பெப்.26) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 74 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 80 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 81 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*