;
Athirady Tamil News

வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய நுழைவாயிலின் திறப்பு விழா!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் மகாவிஸ்னு ஆலயத்தின் முகப்பு நுழைவாயில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இவ் நுழைவாயில் முகப்பு சுமார் 16 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

நுழைவாயில் முகப்பு சிற்பபாக அமைக்கப்பட்டு இன்று காலைஆலய பிரதம குரு மயூரசர்மாவின் பூஜை வழிபாடுகளை அடுத்து திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஆலயத்தின் வளர்ச்சிக்கான பங்காற்றிய மணியம் பாராளுமன்ற உறுப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகசைபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், நிரோசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட அடியார்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 5 =

*