;
Athirady Tamil News

காரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு!!

0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எழுதிய காரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) மாலை 04.01 மணியளவில் கல்வியியற் கல்லூரியின் பிரதான கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வவுனியா கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க.பேர்னாட்டும் கௌரவ விருந்தினராக தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி.ச.அமிர்தலிங்கமும் சிறப்பு விருந்தினர்களாக வாழ்வகம் நிறுவுனர் ஆ.இரவீந்திரன் , “எங்கட புத்தகங்கள்” நிறுவுனர் திருமதி.கு.வசீகரன் மற்றும் சீர் உயிர் நிறுவுனர் செல்வி ஸ்ராலின் மற்றும் தேசிய விருது வென்ற கவிஞன் காரையூர்க்கவி வா.வடிவழகையன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்வின் வரவேற்புரையினை தேசிய கல்வியியற் கல்லூரியின் முகிழ்நிலை ஆசிரியர் செல்வி கார்த்திகா கணபதி நிகழ்த்தவுள்ளதுடன் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் தலைமை உரையினைத் தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்று தொடர்ந்து நூல்களின் அறிமுக நயவுரைகளும் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து காரைக்கவி கந்தையா பத்மானந்தனின் தலைமையில் பிரபல கவிஞர்களின் பங்கேற்புடன் வீழ்வேனென்று நினைத்தாயா எனும் சிறப்புக் கவியரங்கமும் நடைபெறவுள்ளது.
நினைவுப் பரிசில்கள் வழங்கல், நிகழ்வின் கௌரவ விருந்தினர் மற்றும் முதன்மை விருந்தினர்களின் உரைகள் , காரைக்கவி கந்தையா பத்மானந்தனின் ஏற்புரை மற்றும் நன்றியுரைடன் நிகழ்வுகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*