;
Athirady Tamil News

காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!!

0

கடற்படை மற்றும் சங்கானே கலால் பிரிவு இணைந்து கடந்த 25 ஆம் திகதி பருத்தித்துறை தம்பாலை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 21 கிலோ மற்றும் 510 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கடந்த 25 ஆம் திகதி தம்பாலை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ மற்றும் 510 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை கண்டுபிடித்துள்ளது.

மேலும், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அன்தோனிபுரம், பலாலி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் குறித்து சங்கானே கலால் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*