;
Athirady Tamil News

ரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்!!

0

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு முன்னர் என்னை கொலை­செய்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கி­யமை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு விரைவில் அழைப்பு விடுக்கும் என இராஜாங்க அமைச்­சரும் அர­சாங்க ஊடக பேச்­சா­ள­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

மின்­சக்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால், மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குற்­றச்­சாட்டு தொடர்­பாக ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு இது­வரை வாக்­கு­மூலம் ஒன்­றைக்­கூட பெறாமல் இருப்­பது தொடர்­பாக கேட்­கப்­பட்ட கேளி­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குற்­றச்­சாட்டு தொடர்பில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது. ஆனால் குற்­றப்­பு­லனாய் பிரிவு ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குற்­றச்­சாட்டு தொடர்­பாக வாக்­கு­மூலம் பெறு­வ­த­றகு முன்னர் என்னை கொலை­செய்­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரன்ஜன் ராம­நா­யக்­க­வுக்கு ஆலாே­சனை வழங்­கி­யமை தொடர்­பாக வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்ளும்.

என்னை கொலை­செய்­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரன்ஜன் ராம­நா­யக்­க­வுக்கு ஆலாே­சனை வழங்கி குரல் பதிவு கடந்த மாதங்­களில் ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அந்த குரல் பதிவு ரன்ஜன் ராம­நா­யக்க மற்றும் ரணில் விக்­ர­ம­சிங்­வு­டை­யதா என உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ரசா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. பகுப்­பாய்வு அறிக்கை நேற்று (நேற்­று­முன்­தினம்) கிடைக்­கப்­பெற்­றி­ருக்­கின்­றது.

அதனடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அடுத்தவாரமளவில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கும் என நம்புகின்றேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eight =

*