;
Athirady Tamil News

எல்லை தாண்டி மீன்பிடித்த 5 மீனவர்கள் படகுடன் கைது!!!

0

மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர், எல்லை தாண்டி மீன் பிடித்தாக குறித்த மீனவர்களை படகுடன் கைது செய்து ராமேஸ்வரம் மெரைன் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக மெரைன் போலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − ten =

*