;
Athirady Tamil News

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை – சாணக்கியன் எதிர்ப்பு!!

0

கொரோனோ வைரஸினால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு மாந்தீவினை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை அனுமதிக்க முடியாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உலகத்தில் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா நோய் பரவிக்கொண்டிருக்கின்றது.

இந்த வைரஸ் மிகவும் மோசமான வைரஸாக காணப்படுகின்றது. இதுவரையும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் பல உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்த நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்கள் என இனம்காணப்பட்டால் அவர்களை அனுமதிப்பதற்கு இடம் தேவைப்படுவதனால் அரச வைத்திய அதிகாரி சங்கம் மட்டக்களப்பு மாந்தீவு எனும் பகுதியை இனங் கண்டுள்ளார்கள்.

இதுதொடர்பான செய்தி பல ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இந்த மாந்தீவானது 1920 ஆம் ஆண்டளவில் சுமார் 500 மேற்பட்ட நோயாளிகளை சிசிச்சைக்காக அனுமதித்த இடமாகும். தற்போது இவ்வைத்தியசாலையில் மூன்று தொழுநோயாளர்கள் இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையை மீள் புனரமைத்து செய்து கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுக்கு சிசிச்சை அளிப்பதற்காக அரச வைத்திய சங்கம் அனுமதி கோரியிருப்பதாகவும் அறிய முடிகின்றது. அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!

மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 15 =

*