;
Athirady Tamil News

கனடாவில் மனைவியுடன் மளிகை கடைக்கு சென்ற கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

0

கனடாவில் மளிகை கடைக்கு மனைவியுடன் சென்ற போது மருத்துவர் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அதில் அவருக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் Surrey நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவர் எலும்பியல் மருத்துவராக உள்ளார்

ராபர்ட் தனது மனைவியுடன் மளிகை கடைக்கு சென்றார், மனைவி உள்ளே பொருட்கள் வாங்கி கொண்டிருந்த நிலையில் ராபர்ட் வாசலில் இருந்தார்.

அப்போது அங்கு விற்கப்பட்ட லொட்டரி சீட்டுகளை ராபர்ட் வாங்கினார். அந்த சீட்டுகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும் என அவர் அப்போது நினைத்திருக்கவில்லை.

பின்னர் அதை சோதனை செய்த போது ஒரு சீட்டுக்கு $500,000 பரிசு விழுந்தது தெரியவந்தது.

இந்த லொட்டரி சீட்டின் மொத்த பரிசு தொகை $1 மில்லியன் என்ற நிலையில் Quebec-ஐ சேர்ந்த பெண்ணுக்கு பாதி பரிசு கிடைக்கவுள்ளது.

இது குறித்து ராபர்ட் கூறுகையில், என் மனைவி கடைக்குள் இருந்த போது நாயுடன் வாசலில் நின்றிருந்த போதே லொட்டரி சீட்டுகள் வாங்கினேன்.

இப்படியொரு அதிர்ஷ்டம் அடிக்கும் என நான் நினைக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*