உயிரிழந்து 86 ஆண்டுகளுக்குப்பின் ஒருவரின் குடியுரிமையை பறித்துள்ள ஜேர்மனி..!!!

உயிரிழந்து 86 ஆண்டுகளுக்குப்பின் ஒருவரின் குடியுரிமையை பறித்துள்ளது ஜேர்மனி. அவர் ஜேர்மன் அதிபராக இருந்த Paul von Hindenburg என்பவர். யார் இவர்
ஏன் அவரது குடியுரிமை இப்போது பறிக்கப்படுகிறது? இந்த Hindenburgதான் ஹிட்லரை ஜேர்மன் சேன்ஸலராக்கியவர். நாஸிக்கட்சியைச் சேர்ந்த ஹிட்லரை சேன்ஸலராக்கி, 12 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தவர் இவர்தான்.
பெர்லின் மேயரான மைக்கேல் முல்லர், நேற்று முறைப்படி Hindenburgஇன் குடியுரிமையை பறித்தார்.
அது தொடர்பான நிகழ்ச்சியின்போது பேசிய இடது சாரி நாடாளுமன்ற உறுப்பினரான Regina Kittler, ஜேர்மனியில் குடியரசு அழிவதற்கு காரணமாக விளங்கிய Hindenburg ஒரு மோசமான குற்றவாளி என்று வர்ணித்தார்.
சமீப காலமாக Dortmund, Kiel, Cologne, Leipzig, Munich மற்றும் Stuttgart ஆகியவற்றின் உள்ளூர் ஆளும் அமைப்புகள் Hindenburgஐ நிராகரித்துள்ளன. எனவே, 1934இல் இறந்த Hindenburgஇன் குடியுரிமை தற்போது பறிக்கப்பட்டுள்ளது