ஆற்றில் மிதந்து வந்த சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த உடல்: அதிர்ச்சியடைந்த மீனவர்..!!

தாய்லாந்திற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட சீனாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த வாங் ஜுன் மற்றும் அவரது மனைவி ஜு பிங் (28) ஆகியோர், 13 சீன சுற்றுலாப் பயணிகளுடன் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர்.
பிப்ரவரி 14ம் திகதி வந்தடைந்த பின்னர், பாங்காக்கிற்கு அருகிலுள்ள பட்டாயாவில் மூன்று வில்லாக்களை வாடகைக்கு தங்கியிருந்தனர். சுற்றுப்பயணம் முடிந்ததும் மற்ற குழுக்கள் நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் மீனவர் ஒருவர், ஆற்றில் மிதந்து வந்த கருப்பு நிறத்திலான சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு மனிதர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், வாங் ஜுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மாயமான அவருடைய மனைவியின் உடலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவரும் சூட்கேசில் அடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இரண்டு கைது வாரண்டுகளைத் தயாரித்து வருவதாகவும் பொலிஸ் லெப்டினன்ட் கர்னல் ஜிட்டிபோல் பொல்பொன்ப்ரூக்ஸா தெரிவித்துள்ளார்.