முன்னாள் பிரதமர் பிறந்த நாள் – மொரார்ஜிதேசாய் படத்துக்கு மோடி மலர் அஞ்சலி..!!!

முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாயின் 124-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் தனது கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு மொரார்ஜிதேசாயின் கொள்கை அடிப்படையிலான அரசியலை பாராட்டி விளக்க உரையாற்றி உள்ளார்.
அதில் மோடி பேசுகையில், முன்னாள் பிரதமர் பிப்ரவரி 29-ந்தேதி பிறந்தார். இதனால் அவரது பிறந்த நாள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே கொண்டாடப்படுகிறது. அவரது அரசியல் ஒழுக்கம் கொள்கையால் அவர் எப்போதும் நினைவில் வைக்கப்படுவார்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.