;
Athirady Tamil News

திருவனந்தபுரத்தில் ‘பேஸ் புக்’ காதலியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷாத் (வயது 25). வாலிபர் அன்ஷாத் பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உடையவர். அவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் அந்த பெண்ணுடன் நட்புடன் பழகி வந்த அன்ஷாத், அதன் பிறகு அவருக்கு காதல் வலை விரித்தார். அதை உண்மை என்று நம்பிய அந்த பெண்ணும் அவருடன் பழகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அன்ஷாத், அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறினார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்ததால் அந்த பெண்ணை தேடி கல்லம்பலத்திற்கு அன்ஷாத் சென்றார்.

அங்கிருந்து போன் செய்து அந்த பெண்ணை தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தார். பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அன்ஷாத் அந்த பெண்ணை ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டார்.

அதன் பிறகு அந்த பெண்ணுடனான ‘பேஸ்புக்’ தொடர்பையும் அவர் துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், நடந்த சம்பவங்களை கூறி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தம்பனூரில் வைத்து அன்ஷாத்தை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*