சங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் டிரைவர் கைது..!!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் சேது என்ற சேதுராஜ் (வயது 33). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சவாரிக்கு அழைத்து சென்ற போது இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு செல்வதாக சிறுமியை, சேது ராஜ் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சங்கரன்கோவில் பஸ் நிலைய பகுதியில் சென்ற போது காரை நிறுத்தி திடீரென்று சேதுராஜ் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் சேதுராஜ் தப்பிசெல்ல முயன்றார். எனினும் அவரை பொதுமக்கள் விரட்டிபிடித்து சங்கரன்கோவில் டவுண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சேதுராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தெற்கு மாவிலியூத்தை சேர்ந்த அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.