;
Athirady Tamil News

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், கள்ளக்காதலன் கைது..!!!

0

கோவை மரக்கடை அருகே உள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி பர்சானா. இவர்களது மகன் முகமது நிஷார் (வயது 28). இவர் அந்த பகுதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

முகமது நிஷாருக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி உறவினர்கள் முன்னிலையில் போத்தனூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் சிறுமிக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரஞ்சித்குமார் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த விவகாரம் முகமது நிஷாருக்கு தெரிய வரவே அவர் சிறுமியை கண்டித்தார். இதனையடுத்து கடந்த 5-ந் தேதி சிறுமி தனது கள்ளக்காதலன் ரஞ்சித்குமாருடன் வீட்டை விட்டு ஓடினார்.

தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி முகமது நிஷார் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முகமது நிஷார் 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் இது குறித்து மேற்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற ரஞ்சித்குமாரை கைது செய்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த முகமது நிஷாரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 16 வயது சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்த அப்துல் சலாம், பர்சானா ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 2 =

*