வடக்கின் போர் எதிர்வரும் 05 ஆம் திகதி!! (படங்கள்)
வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது.
114 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பும், வீரர்கள் அறிமுக நிகழ்வும் நேற்று(29) யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரிச் சீருடையில் வீதிகளில் உலாவுதல், பணம் சேகரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், பாதுகாப்புத் துறை அவர்களை பொறுப்பேற்கும்.
போட்டி நடைபெறும் குறித்த மூன்று நாட்களும், மைதானத்திற்குள் வீரர்கள், மத்தியஸ்தர்கள், மாணவத் தலைவர்கள், வைத்தியர்கள் ஆகியோரைத் தவிர எவரும்அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறுவோர் தண்டனைக்குரியவர்களாக கணிக்கப்படுவார்கள். இந்த விடயங்களை பொலிஸாருக்கும் மற்றும் கல்லூரி சமூகத்தினர் கவனிப்பார்கள்.
ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை (05) முற்பகல் 9.15 மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று போட்டி மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என இரு கல்லூரி அதிபர்களும் தெரிவித்தனர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்