;
Athirady Tamil News

“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு!! (படங்கள்)

0

“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குழாம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பங்கேற்புடன் இன்று (01) “ஐ” றோட் அபிவிருத்தி திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் 273 கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில், போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
மூன்று வருடங்களுக்குள் நாடு முழுவதும் கிராமப் புறங்களில் உள்ள சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு வருடங்களில் குறித்த பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளன

இதேவேளை நுணாவில் சரசாலை வீதி,
மாமுனை -கட்டைக்காடு வீதி,
மந்திகை- தம்பசிட்டி ,
அல்வாய் வீதி,
உடுப்பிட்டி -மாலு சந்தி ,
அல்வாய் வீதி,
தெல்லிப்பளை திட்டி வீதி,
தும்பளை வீதி,
பிராம்பத்தை – பண்டத்தரிப்பு வீதி,
மூளாய் வீதி,
பாலவோடை- ஊரி வீதி,
ஊரெழு – நீர்வேலி வீதி,
பிரவுன் வீதி,
இராசாவின்தோட்டம் வீதி,
மண்கும்பான் – சாட்டி வேலணை வீதி,
ஊர்காவற்றுறை , சுருவில் சரவணை வீதி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.ம.பிரதீபன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திரு.எஸ்.முரளிதரன்,பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eleven =

*