முதல்-மந்திரி பாதுகாப்பு பணியில் கைக்குழந்தையுடன் பெண் போலீஸ்..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக நொய்டா வந்திருந்தார். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்களில் பிரீத்தி ராணி என்ற பெண் போலீசும் ஒருவர். அவர், தனது கையில் 1½ வயது குழந்தையுடன் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது கணவர் தேர்வு எழுத சென்று இருக்கிறார். இதனால் அவரால் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், எனக்கு கடமையும் முக்கியம். அதனால்தான், குழந்தையுடன் பணிக்கு வந்து இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.