;
Athirady Tamil News

டெல்லி கலவரத்தில் போலீசை துப்பாக்கியால் மிரட்டியவர் கைது..!!

0

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 47 பேர் பலியாகி இருந்தனர். 300 பேர் காயம் அடைந்திருந்தனர்.

டெல்லி வன்முறை சம்பவத்தின் போது வாலிபர் ஒருவர் போலீசை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இருந்தது.

இந்த நிலையில் போலீசை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாரூக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர்.

வாலிபர் ஷாரூக் வன்முறை சம்பவத்தின் போது ஜாபராபாத்தில் துப்பாக்கியால் 8 ரவுண்டு சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − eleven =

*