;
Athirady Tamil News

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

0

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேதலாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (03) பகல் 1.10 மணியளவில் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*