;
Athirady Tamil News

தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள்!!

0

கொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது.

பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக சந்திப்பொன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

” சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் தற்போது சுமார் 262 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை போன்று சர்வதேச சுகாதார அமைப்பு ஆகியன இதனை உலகளாவிய அச்சுறுத்தலாக அறிவித்துள்ளன.

இதன் காரணமாக சுகாதார அமைச்சு என்ற வகையிலும், இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டு குழு என்ற வகையிலும் இன்று காலை கூடிய கூட்டத்தின் போது நாம் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். அதில் ஒரு தீர்மானமாக தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதனால் அந்நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

இந்த வைரஸ் பரவல் நிலையை தடுப்பதற்காக அவ்வப்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தொடர்ந்தும் செயற்பாட்டு குழுவொன்று நாள்தோறும் கூடுவதற்கும் அது தொடர்பில் செயற்படுவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம். என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 19 =

*