மலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு!! (படங்கள்)
மலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம்.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் வளமிக்க காட்டுப்பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்புடவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்று (03) திகதி சிவனொளிபாதமலை வனபாதுகாப்பு பிரிவான வாழமலை மறே நீர் வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியில் இனந்தெரியாதவர்கள் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் உள்ள வளமான காட்டுப்பகுதிய எரிந்து நாசமாகியள்ளன.இந்த தீயினை கட்டுப்படுத்த வான் படைக்கு அறிக்கப்பட்டுள்ள.
குறித்த காட்டுப்பகுதியில் இது வரை சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.
இதனால் இந்த பகுதியில் அதிமாக வாழும் மான், மறை, முயல், புள்ளிமான் போன்ற இனங்கள் அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
கடந்த ஒரு வாரததிற்குள் மஸ்கெலியா, நோர்வூட் ,காசல்ரி, வனராஜா, வட்டவளை சிங்கமலை, சாஞ்சமலை, பொகவந்தலாவை, கொட்டகலை தலவாக்கலை, டயகம,உள்ளிட்ட பல காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாத விசமிகள் வைத்த தீ காரணமாக அப்பகுதியில் வளமிக்க வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகின.
இந்த தீ காரணமாக இதுவரை சுமார் 500 மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.
ஒரு நாட்டில் இதயமாக காணப்படும் காடுகளுக்கு தீ வைப்பதன் காரணமாக எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு
வாய்ப்பிருப்பதாகவும், நீரூற்றுக்கள் அழகிய நீர் வீழ்ச்சிகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரேந்தும் பிரதேசங்களான காசல்ரி, மவுசாகலை, கெனியோன், மேல்கொமலை அண்மித்த பகுதியில் கடந்த சில தினங்களாக தீயினால் பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனால் எதிர்காலத்தில் தேசிய மின் உற்பத்தி பாரிய அளவில் குறைவடைய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அத்தோடு எமது நாட்டுக்கே உரித்தான அறிய வகை தாவரங்கள் புல் பூண்டுகள்,மூலிகைகள்,அறிய வகை விலங்கினங்கள்,ஆகியனவும் அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
காட்டுத் தீயினை அணைப்பதற்கு வான்படைகள் பயன்படுத்தப்படுவதனால் இதற்கு பாரிய நிதியினையும் செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றன.
இந்நிலையில் தீ வைப்பவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இது உரிய அதிகாரிகள் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”