;
Athirady Tamil News

யாழ். மாநகர சபையின் அமர்வை மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வை!!

0

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த அமர்வில் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இடங்களை பார்வையிடுவதோடு யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்விலும் கலந்து கொண்டு அமர்வினை பார்வையிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாநகர சபையின் விருந்தினர் பார்வை அறையிலிருந்து மாநகர சபை அமர்வினை அவர்கள் பார்வையிடுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + ten =

*