;
Athirady Tamil News

இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாய்!!!

0

வீதியைக் கடக்க முற்பட்ட 4 வயதுப் பாலகனை வான் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கணவனைப் பிரிந்து வாழும் தாயார் 3 பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையை இழந்த நிலையில் மற்றொரு மகனையும் இழந்து தவிக்கின்றார்.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் ராஜா பிளாச வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஜீவன் அபிசரன் (வயது 4)என்ற பாலகனே உயிரிழந்தார்.

பாலகன் தனது வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளான். அப்போது அவரின் தாயார் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

தாய் கூப்பிட்டதை அடுத்து பாலகன் வீட்டை நோக்கி வீதியைக் கடக்க ஓடிச் சென்றுள்ளான். அப்போது வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த வான் மோதில் படுகாயமடைந்தான். பாலகன் உடனடியாக தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டான்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் பாலகன் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளான்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வாகன சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

மருத்துவரின் வாகனத்தை அவரது சகோதரர் எடுத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக மன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, சாரதியை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் தாயார் தனது மூன்று பிள்ளைகளில் ஏற்கெனவே ஓர் ஆண் குழந்தை இறந்து விட்டது.

தற்போது இந்த பாலகனும் உயிரிழந்துள்ளான். தற்போது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை உடன் தாயார் கணவனை பிரிந்த நிலையில் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*