;
Athirady Tamil News

கொரோனா பீதி: பொதுமக்கள் கூட்டமாக கூடவேண்டாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவுரை..!!!

0

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் துவக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவத்தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் படியும், அவ்வாறு கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகள் எதேனும் இருந்தால் அதை தள்ளிவைக்கும் படியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் வகையில் ஏதேனும் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மாநில அரசுகள் போதிய உதவிகள் செய்யவேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 14 =

*