;
Athirady Tamil News

யாழ்.வலிகாமத்தில் ஆரம்பமானது புகையிலை அறுவடை!! (வீடியோ, படங்கள்)

0

யாழ். வலிகாமம் பகுதியில் புகையிலை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வலிகாமத்தில் இணுவில், மருதனார்மடம், குப்பிழான், ஏழாலை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன்,கட்டுவன், ஈவினை, வயாவிளான், மயிலங்காடு, சுன்னாகம், கந்தரோடை, அளவெட்டி,தெல்லிப்பழை, ஊரெழு, உரும்பிராய் , கோண்டாவில், அச்செழு, நீர்வேலி, புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான ஹெக்டேயர் நிலப்பரப்பில் “பணப் பயிர்” என விவசாயிகளால் அழைக்கப்படும் புகையிலை இம்முறை நடுகை செய்யப்பட்டுள்ளது.

புகையிலைப் பயிரின் தரத்திற்கேற்ப ஒரு புகையிலைக் கன்று தற்போது 60 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனையாகிறது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து இம்முறை வலிகாமத்தில் புகையிலைச் செய்கையில் பெரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், புகையிலைச் செய்கை மூலம் ஒரே தடவையில் தொகையான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதால் இதனையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள பல குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள் புகையிலைச் செய்கையைத் தம்மால் கைவிட முடியாதெனத் தெரிவிக்கின்ற்னர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 4 =

*