;
Athirady Tamil News

மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் !! (படங்கள்)

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நெல்லியடியில் இடம்பெற்றது.

நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகல் 4:30 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் தம்பன் துசாந்தன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் உருவப்படத்துக்கு துணைவியார் திருமதி சோதி மலர் மாலை அணிவித்து பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஆனந்தராசா, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர்கள் க.சுகாஷ், சி.காண்டீபன் ஆகியோர் மலர் மாலைகளை அணிவித்தனர்

சிவனேசனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், செயற்பட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கல்நது கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*