;
Athirady Tamil News

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மினசார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். நாவலர் வீதியில் கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டித் தெரு வரை, பாரதி வீதி, புரூடி வீதி, நொத்தாரிஸ் லேன், நல்லூர் குறுக்கு வீதி, கட்டுடை- மானிப்பாய் வீதி, கட்டுடை, பிப்பிலி, காங்கேசன்துறைப் பிரதேசம், பெற்றோலியக் கூட்டுத்தாபன அலுவலகம், பெற்றோலியம் பம்ப் ஹவுஸ் , காங்கேசன்துறை கடற்படை முகாம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழைப் புற்றுநோய் வைத்தியசாலை, வீமன்காமம், வறுத்தலை விளான், மயிலிட்டி, தையிட்டி, காங்கேசன்துறை SLNS Uththara, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம்,(புதியது), பலாலி விமான நிலையம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி விமானப் படை ஓய்வுகால விடுதி, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*