;
Athirady Tamil News

குருவாயூர் கோவிலில் யானைகள் ஓட்டப்பந்தயம்- 8வது முறையாக கோபிகண்ணன் யானை முதலிடம்..!!

0

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உள்ளது.

குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் தொடக்க நாள் அன்று யானைகள் ஓட்டப்பந்தயம் நடக்கும்.

குருவாயூர் கோவில்

அதன்படி, இந்த ஆண்டுக்கான யானைகள் ஓட்டப்பந்தயம் நேற்று கோவில் முன்பு நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 24 யானைகள் கலந்து கொண்டன.

யானைகள் ஓட்டப்பந்தயத்தில் கோபிகண்ணன் என்ற யானைக்கு முதல் பரிசு கிடைத்தது. கோபிகண்ணன் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து 8-வது முறையாக பரிசை தட்டிச் சென்றது.

யானைகள் ஓட்டப்பந்தயத்தை காண கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். கால்நடை டாக்டர்களும் பந்தயத்தில் பங்கேற்ற யானைகளை கண்காணித்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

முதல் பரிசு பெற்ற கோபிகண்ணன் யானைதான் இனி குருவாயூர் கோவில் திருவிழா முடியும் வரை சாமி சிலைகளை சுமந்து செல்லும். அனைத்து மரியாதைகளும் இந்த யானைக்கே அளிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*