;
Athirady Tamil News

கொரோனாவுக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடும் நோயாளிகள்..!!!

0

கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

புவனேஸ்வருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் தொற்று இருப்பது விமான நிலைய கண்காணிப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரும் அவருடன் வந்த நபரும் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ மனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்ட போது, அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

அவர்கள் மருத்துவ மனையை விட்டு தப்பிச் சென்றது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதே போல துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனைக்காக அவருடைய ரத்த மாதிரிகளை வாங்க முற்பட்டபோது, அதை அளிக்காமல் மருத்துவ மனையை விட்டு தப்பி ஓடிவிட்டார். கொரோனா பரவுவது தொடர்பான செய்திகளை அறிந்த பிறகு, அவரே நிலையை உணர்ந்து, மருத்துவமனைக்குத் திரும்பி ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + two =

*