;
Athirady Tamil News

சக “தோழியின்” லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட “கோழி”.. வைரலாகும் அடடே வீடியோ! (வீடியோ)

0

எந்த ஊர்.. எந்த நகரம் என்று தெரியவில்லை.. ஆனால் காட்சிகள் சூப்பர்.. ஆமாங்க ஒரு கோழியே சிக்கன் லெக் பீஸை ருசித்து சாப்பிடுகிறது.

அதாவது இன்னொரு கோழியின் லெக் பீஸை ஒரு கோழி கொத்திக் கொத்தி ருசித்து சாப்பிடும் வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது. சனிக்கிழமையும் அதுவுமா லெக்பீஸா.. பெருமாளே என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள். ஜாலியாக பாருங்க.

அந்த வீடியோவை பார்க்க செமையாக இருக்கிறது. இப்போ இதுதான் வைரலாகியும் உள்ளது. அதுதான் விசேஷமே. லுக்மில் என்பவர்தான் இந்த வீடியோவைப் போட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் ஒரு வாட்ட சாட்டமான விடைக் கோழி காணப்படுகிறது. கையில் ஒரு சிக்கன் லெக்பீஸுடன் ஒருவர் இருக்கிறார். அவர் அந்த கோழியிடம் லெக்பீஸை நீட்டியடி காட்சி தருகிறார். அதை அந்த கோழி அழகாக கொத்தி கொத்தி திண்கிறது. அதற்கு அது தன்னுடைய சக தோழியின்.. அதாவது கோழியின் சதை அது என்று தெரியாது போல.. ஆர்வத்தோடு கொத்தித் திண்கிறது.

நமக்குத்தான் பார்க்கவே பாவம் போல இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சக கோழியின் சதையாச்சே என்று நமக்குத்தான் பதறுகிறது. ஆனால் அந்தக் கோழி அழகாக அதை சாப்பிடுகிறது.. ஆச்சரியமாகவும் இருக்கிறது இதைப் பார்த்தால். இந்த வீடியோ இப்போது வைரலாகி விட்டது சமூக வலைதளங்களில். என்ன செய்வது தோழியாக இருந்தாலும்.. அந்த கோழிக்கும் பசிக்குமில்லையா.. சாப்பிடத்தானே செய்யும்!?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*