ஜனாதிபதி மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் – ப.உதயராசா!!

ஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்; ப.உதயராசா
ஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் பொதுஜன பெரமுனவின் கூட்டனிக் கட்சியான சிறிரெலொ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதராசா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பதவியேற்பின் போது தேர்தல் விஞ்ஞானத்தில் கூறியது போல் மக்களின் அனைத்து தேவைகளையும் ஐந்து வருடத்துக்குள் பூர்த்திசெய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு அடையாளமாக இன்று பல மாற்றங்களை செய்து வருகின்றார். பொதுமக்கள் அரச உத்தியோகத்தர்களை அரசஅலுவலகங்களில் சந்தித்து தங்களுடைய வேலைத்திட்டங்களை இலகுவாக பெறக்கூடிய வகையில் பல திடீர் விஜங்களை மேற்கொண்டு பல பாரிய மாற்றங்களை செய்து வருகின்றார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இலகுவாக பெறுக்கூடிய வகையிலும், விமானநிலையத்துக்கு இலகுவாக செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் மற்றும் வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு நேரில் சென்று தவறான அதிகாரங்களை பயன்படுத்தாது சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக அழுத்தங்களைக் கொடுத்து மக்கள் சிரமமின்றி தமது தேவைகளை பெற்றுச்செல்லக் கூடிய வகையில் செய்துகொடுத்துள்ளார்.
ஜனாதிபதிதேர்தலில் தமிழ்வாக்குகள் அல்லது சிறுபான்மையினரின் வாக்குகள் குறைவு என்பதால் அவருக்கு தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கம் இல்லை.
அவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத தன்மை அவரிடம் இல்லை. அவர் நாட்டின் ஜனாதிபதியாக பயணித்துக் கொண்டு இருக்கிறார்.
நாம் எதிர்பார்த்ததைவிட அவருக்கு எதிராக எதிர்கட்சிகள் செய்த பிரச்சாங்களை விட அவர் இலகுவாக இந்த நாட்டைகட்டியெழுப்புவார். ஐந்து வருடங்களுக்கும் பாரியை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகமாறும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”