;
Athirady Tamil News

ஆந்திராவில் கொரோனா பீதியை கிளப்பிய 4 மாணவர்கள் சஸ்பெண்டு..!!!

0

சீனாவில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 90 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சிலருக்கு இந்த வைரசுக்கான அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆந்திராவில் கல்லூரி மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி உள்ளனர்.

கடப்பாவை சேர்ந்த குளோபல் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்- அப்பில் பொய்யான தகவல்களை பரப்பி உள்ளனர்.

இந்த பொய் தகவல் கல்லூரி முழுவதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 4 மாணவர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர், போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் போது மாணவர்கள் கொரோனா குறித்து பீதியை கிளப்பியதை ஒப்புக்கொண்டனர். பரீட்சையை தள்ளி வைப்பதற்காக தாங்கள் பொய்யான தகவல்களை பரப்பியதாக அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*