;
Athirady Tamil News

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள்!! (படங்கள்)

0

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள் – முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்

காரைநகர், ஊரி மாணவர்களுக்கான அன்புச்சோலை முன்பள்ளி மாணவர்களுக்கான பாண்ட்வாத்தியத்தேவை பற்றிமுன்பள்ளி சமூகத்தினரால் முன்னாள் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று 07.03.2020 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் முன்பள்ளி மாணவர்களுக்கானபாண்ட்வாத்தியத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்பள்ளியின் கோரிக்கையின் பேரில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் அவர்களின் சிபார்சின் பேரில் செரெண்டிப் சிறுவர் இல்ல நிறுவனத்தினரால் ரூ.50,000/= பெறுமதியான பாண்ட்வாத்தியத்தொகுதி முன்பள்ளியின் மேற்பார்வையாளர் வண.தேவ.அருட்செல்வன் அடிகளார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் அவர்களுடன் செரெண்டிப் நிறுவனத்துக்கான இலங்கையின் பிரதிநிதி கந்தசாமி, யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், மற்றும் ஆசிரியர்களான திரு. மோகன் கவிதா தம்பதியினர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஊரவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 10 =

*