இருவேறு விபத்துக்களில் ஒருவர் காயம் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளன.!! (படங்கள்)
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் ஹட்டன் அலுகம் பகுதியில் இன்று (07) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்; மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் இரண்டு கார்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
சிவனொளிபாதமலை சென்று திரும்பி சென்றுக்கொண்டிருந்த இரண்டு கார்களும்,ஹட்டன் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியினை நோக்கி சென்ற காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
சிவனொளிபாதமலை சென்று திரும்பி கொண்டிருந்த இரண்டு கார்களில் ஒரு கார் மற்றய காரினை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
இந்த விபத்து காரணமாக சில மணித்தியாலங்கள் பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.
இதே வேளை குறித்த விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 டிக்கோயா பகுதிக்கு தொலைவில் மற்றுமொரு விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் பஸ் ஒன்றில் மோதுண்டே காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த இரண்டு விபத்துக்கள் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”