;
Athirady Tamil News

சுவிஸில் இங்கே தான் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து ஆய்வு செய்யப்படுகிறது..!!!

0

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்துக்கு ஏங்கி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சுய தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், விழாக்கள் கேளிக்கைகள் என பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்,பொதுமக்கள் மிகுந்த அக்கறையுடன் சுத்தமாகவும் இருத்தல் வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துவது, உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து தயாராகவில்லை என்பதாலையே.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், எந்த நாடும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் மருந்து தாயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில் பெர்ன் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள வைராலஜி மற்றும் இம்யூனாலஜி நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இங்குள்ள நுண்ணுயிரியல் வல்லுனர் Jörg Jores மற்றும் வைராலஜிஸ்ட் Volker Thiel மற்றும் அவர்களது குழு இரவு பகல் பாராமல் ஆராய்ச்சி செய்து வருகின்றது.

மட்டுமின்றி கொரோனா வைரஸ் எவ்வாறு உருவாகியுள்ளது அது எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றனர்.இதன் அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முக்கிய பங்களிப்பை வழங்க உள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*