;
Athirady Tamil News

மேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி..!!

0

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேட்டுவயலார் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 43). சண்முகம் (46). கட்டிட தொழிலாளர்கள்.

நேற்று காலை 2 பேரும் சேத்துப்பட்டு கிராமத்துக்கு கட்டிட வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு 2 பேரும் ஒரு ஆட்டோவிவில் சொந்த ஊருக்கு திரும்பிகொண்டு இருந்தனர். ஆட்டோவை சேத்துபட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் அப்துல் கரீம் ஓட்டினார்.

இந்த ஆட்டோ மேல்செவலாம்பாடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென்று ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி முருகன், ஆட்டோ டிரைவர் அப்துல் கரீம் ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். ஆட்டோவில் வந்த சண்முகம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக அவலூர்பேட்டை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்தனர். உயிருக்கு போராடிய சண்முகத்தை மீட்டு மேல்மலையனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரியில் வைக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 2 =

*