;
Athirady Tamil News

தென்மராட்சியில் மகளிர் தின நிகழ்வில் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர்கள் இருவரும் அறிமுகம்!! (படங்கள்)

0

தென்மராட்சி வனப்புறு வனிதையர் நடத்தும் உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
திருமதி பவுலின் சுபோதினி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு, சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு போன்ற தலைப்பில் சிறப்புரைகளும் இடம்பெறவுள்

நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருமதி சசிகலா ரவிராஜ், மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + eighteen =

*