;
Athirady Tamil News

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம்!! (படங்கள்)

0

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் இன்று 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மணடபத்தில் சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி யோ.ஹேமநளினி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் யாழ்,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தர்த்தன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபைத்தவிசாளர் அ.ஜெபநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலை நிகழ்வுகள், பரிசளிப்புகள், உரைகள் என்பன இடம்பெற்றதுடன் மகளிர் கௌரவிப்புகளும் இடம்பெற்றன.விருந்தினர்களுடன் முன்பள்ளி ஆசிரியர்கள், மகளிர் பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − five =

*