மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு!! (படங்கள்)
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 08.03.2020 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.
இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான வ.சுவர்ணலதா தலைமையில் நடைபெற்றது.
அட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணியின் காரியாலய மண்டபத்தில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், மற்றும் முன்னணியின் உயர் மட்ட குழுவினர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பெருந்தோட்ட பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”