;
Athirady Tamil News

கொரோனாவுக்கு ஜெர்மனியில் முதல் பலி..!!

0

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கு 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்து 112 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*