மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!!

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட, ஹோகந்தர வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (09) மாலை 3.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாதிவெல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.