;
Athirady Tamil News

விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள் பிளவு இல்லை; சிவாஜிலிங்கம் தெரிவிப்பு!! (வீடியோ)

0

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளைமறுதினம் 12ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும்.

அத்தோடு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுத் தேர்தல் பரப்புரை வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் பிளவு என்று பத்திரிகைகளில் வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளுடன் பேசி தகுந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம்” என்று எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாதிக்குமா?

கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனா? சுரேஷ் பிரேமச்சந்திரனா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + nine =

*