;
Athirady Tamil News

பாண்ட்வாத்தியங்களை“புளொட்” தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வழங்கி வைத்தார்!! (படங்கள்)

0

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக கொடிகாமம் தெற்கு பாலர் பகல் பராமரிப்பு நிலையத்துக்கு பாண்ட்வாத்தியங்கள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் வழங்கி வைத்தார்

கொடிகாமம் தெற்கு பாலர் பகல் பராமரிப்பு நிலையமாணவர்களுக்கான பாண்ட்வாத்தியத்தேவை பற்றிமுன்பள்ளி சமூகத்தினரால் முன்னாள் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று 10.03.2020 செவ்வாய்க்கிழமையன்று மாலை 07 மணியளவில் முன்பள்ளி மாணவர்களுக்கானபாண்ட்வாத்தியத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்பள்ளியின் கோரிக்கையின் பேரில்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் அவர்களின் சிபார்சின் அடிப்படையில் செரெண்டிப் சிறுவர் இல்ல நிறுவனத்தின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட ரூ.70,000/= பெறுமதியான பாண்ட்வாத்தியத்தொகுதியானது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோரின் ஒருங்கிணைப்பில் பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தலைவர் மதிவாண தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் சாவகச்சேரி பிரதேச ச்பையின் உப தவிசாளர் செ.மயூரன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் செரெண்டிப் நிறுவனத்துக்கான இலங்கையின் தலைவர் அ.கந்தசாமி, மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஊரவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் இளைஞர்களுடனான அரசியல் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*