தனியார் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!!

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு ஏற்ப பேராயரின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டின் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் சுனந்த காரியபெரும அத தெரணவிற்கு குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஏப்ரல் மாத முதலாம் தவணை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மீண்டும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)