தனியார் வகுப்புக்கள் மற்றும் தனியார் பாடசாலைகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை நாளை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த அமைச்சில் இன்று (12 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார்.
அதன்படி, நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை அமுலில் இருக்கும்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இந்த விடுமுறை ஆரம்பமாக இருந்ததாக தெரிவித்தார்.
மேலும், தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாடசாலைகள் இது தொடர்பில் உணர்வு பூர்வமாக சிந்திக்கமாறு கோரிக்கை விடுத்த கல்வியமைச்சர் தனியார் வகுப்புகளை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)