;
Athirady Tamil News

மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)

0

“மாரியம்மன் 28 நாட்கள் பச்ச பட்டினி விரதம் இருக்கிறார்… இந்த நாட்களில் நாம் விரதம் இருந்து அம்மனை வணங்குவது சிறப்பு.. மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளிக்கணும்.. மாரியம்மன் கோயில் பிரசாதத்தை விரதமிருந்து சாப்பிட்டு வந்தால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என்று நித்தியானந்தா ஒரு டிப்ஸ் தந்துள்ளார்.

தன் மீதான கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தூக்கி தூரமாக வைத்து விட்டு… பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் நித்தியானந்தா.

இந்த அருளாசிகள் சர்ச்சைகளுடன் கூடியதாகவே இருக்கும் என்பது தான் நித்தியானந்தாவின் ஸ்பெஷல்..

தலைமறைவாக இருக்கும் தன்னை கைது செய்ய சர்வதேச போலீசார் மூலம் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரிந்தும் தன் ஆலைன் வீடியோ அருளாசியை அவர் நிறுத்தவே இல்லை.

அப்படி ஒரு வீடியோவில் கொரோனா வைரஸ் குறித்த தனது கருத்தையும் பதிவிட்டு, அதற்கு மெடிக்கல் டிப்ஸ் ஒன்றையும் டுவிட்டர் பக்கத்தில் வழங்கி உள்ளார் நித்தியானந்தா!

அந்த சுருக்கம்தான் இது:
மொதல்ல கொரோனா வைரஸால் கைலாசா இதுவரை பாதிக்கப்படவில்லை.. இனிமேலும் பாதிக்காது… ஏன்னா, பரமசிவன் பக்கத்துலயே இருக்கார்… காலபைரவரும் எங்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்.. அதனால எங்களை கொரோனா வைரஸ் எதிர்காலத்தில்கூட தாக்காது!

உலகில் ஹிந்து மதத்தை தவறாமல் கடைப்பிடிக்கும் எந்த ஒரு நகரிலும் கொரோனா பாதிப்பு அறவே இல்லை.. பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரோனா வைரஸ் நம்மை தாக்காது… மாசி மாத விரதத்தை சரியாக கடைப்பிடித்தால் கொரோனா தாக்கம் நமக்கு இருக்காது.. மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

மாசி மகம் தொடங்கியுள்ள நிலையில், எல்லா மாரியம்மன் கோயில்களுக்கும் மூல கோயிலாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்ச பட்டினி விரதமிருக்கிறார்..

அந்த அம்மனுக்கு நெய்வேத்யம் செய்யப்படும் பானகம், இளநீர், வெண்ணெய் போன்றவற்றை மட்டுமே நாம் சாப்பிட்டு விரதம் இருந்து வந்தால் இந்த வைரஸ் தாக்குதல் அறவே இருக்காது.. இந்த விரதம் முடிந்தவுடன் அம்மனின் அருளினால் உலக மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கி விடும்” என்று தெரிவித்துள்ளார்.

பச்ச பட்டினி விரதம் இருந்து, மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளித்து.. மாரியம்மன் கோயில் பிரசாதமும் சாப்பிட்டு வந்தால் கொரோனா அண்டாது என்று நித்தியானந்தா சொல்லியுள்ள டிப்ஸ் எந்த அளவுக்கு பயனளிக்கும் என தெரியவில்லை..

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு நித்தி தந்துள்ள இந்த புதிய மருத்துவ டிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)

13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!

விசேட நிகழ்வுகளை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!!

‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு!! (படங்கள்)

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளை முதல் பூட்டு!!

கொரோனா அச்சம் – அனைத்து பாலர் பாடசாலைகளும் மூடப்பட்டன!!

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு தடை!!

உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)

வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! (வீடியோ)

கணனிகளை தாக்கும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!

வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!

மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*