வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

வடக்கு மாகாணத்தில் இதுவரை எந்த ஒரு நபரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த வைரஸ் தொடர்பில் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு கருத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 18 பேர் இலக்காகியுள்ளனர். இருப்பினும் வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த கலந்துரையாடலில் பொது மக்களுக்கான சில அறிவுறுத்தல் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவுள்ள மக்கள் தமது பயணத்தை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இங்கு வர விருப்வவர்களும் தமது பயணத்தை பிற்போடவும். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தொடர்பில் அந்தந்த பகுதி குடும்பநல உத்தியோகஸ்தருக்கு அறிவிக்க வேண்டும்.
பொது மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக விளையாட்டு போட்டிகள், கலை, கலாசார, சமய நிகழ்வுகள், ஏனைய கலந்துரையாடல்கள், கூட்டங்களையும் பிற்போடுமாறும் அல்லது தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலை மீறியும் ஏற்பாடு செய்யப்பட்டாலும் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம். அது தொடர்பில் முறைபிடலாம்.
மேலும் குடும்ப நிகழ்வுகள் அதாவது திருமணம், பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளை பிற்போட வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களுடன் அந்த நிகழ்வுகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சில இடங்களில் நேற்றும் பிறந்த தினம் போன்ற நிகழ்வுகள் அதிகமானவர்களை ஒன்றிணைத்து கொண்டாடப்பட்டதை நாங்கள் அவதானித்துள்ளோம். இந்த செயற்பாடு தற்காலத்pற்கு பொருத்தமானதல்ல.
வணக்கஸ்தலங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பில் வணக்கஸ்தலங்களிற்கு பொறுப்பானவர்கள் அந்த நிகழ்வுகளை தவிர்க்க முடியாவிட்டாலும், அதில் அதிகளவான மக்களை உள்வாங்காமல் நடத்த வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தனிநபர் சுகாதாரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”
கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)
13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!
ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!
‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!
கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!
இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில்!!
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு!! (படங்கள்)
பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு தடை!!
வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! (வீடியோ)
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!