;
Athirady Tamil News

அமேசானில் குவியும் ஆர்டர்கள்- டெலிவரிக்கு 1 லட்சம் பேர் தேவை என அறிவிப்பு..!!

0

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

சீனாவில் மக்களை வீடுகளுக்குள் இருக்க செய்ததால் தான் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடிந்தது. அதே சிகிச்சை முறையை மற்ற நாடுகளும் கடைபிடிக்க தொடங்கி உள்ளன.

அமெரிக்காவிலும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக அமேசானுக்கு பொருட்கள் கேட்டு குவியும் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால் ஆன்லைனில் வரும் முன்பதிவுகளுக்கு ஏற்ப பொருட்களை வினியோகம் செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது.

இதேபோன்று இந்தியாவிலும் ஆன்லைன் முன்பதிவு பொருட்களை வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதாக ஆன்லைன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + eleven =

*