மட்டக்களப்பு வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவருக்கு கொரனா!! (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவருக்கு கொரனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா பரவுவதை தடுக்கும் வகையிலா செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான செயலணியொன்றை அமைக்கும் வகையிலான அவசர கூட்டம் ஒன்று இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி உட்பட பொலிஸ்,இராணுவ அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,சுகதார பிரிவினர்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி,இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கொரணா அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் கொரணா தொற்க்கு இலக்காகாத காரணத்தினால் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இலண்டனில் இருந்துவந்து மட்டக்களப்பு நகரில் இருந்துவந்த 61வயதுடைய ஒருவர் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்பான பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் கொரணாவினால் பீடிக்கப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும் தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒருவர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் தொடர்பான பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் கிராம மட்டத்தில் வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துவம் வகையிலும் அவ்வாறானர்களை இனங்கண்டு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை செயலணி மேற்கொள்ளும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டடது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் செயலணியொன்றும் அமைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!
கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!
வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!
மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!
20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!
வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!
கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)
13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!
ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!
‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!
கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!