சிறுநீர் கழிக்க நிறுத்தியபோது சொகுசு காரை பறிகொடுத்த தொழில் அதிபர்..!!

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷாப் அரோரா. உறவினர் ஒருவரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்தார்.
சனிக்கிழமை இரவு விருந்து ஒன்றுக்கு சென்ற அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் போதையில் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இடையில் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு இடத்தில் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.
அவர் இறங்கி சென்றதும் அவர் பின்னால் வந்த மர்மநபர்கள், காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரிஷாப் கார் திருட்டு பற்றி போலீசில் புகார் கொடுத்தார்.
போதையில் கார் ஓட்டி வந்ததற்காக ரிஷாப்புக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ரிஷாப்புக்கு தெரிந்தவர்கள் இந்த காரை திருடி சென்றிருக்க வாய்ப்புள்ளது. காருக்கு ரூ.40 லட்சம் வங்கிக் கடன் பாக்கி இருப்பதும் தெரியவந்தது. அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.